மாவட்டம் முழுவதும் சூதாட்டம், சேவல் சண்டை, கள், மதுபாட்டில்கள் பறிமுதல்... 33-பேர் கைது.!!

கோவை: கோவை மாவட்டம் முழுவதும் சூதாட்டம் மது பாட்டில்கள், சேவல் சண்டை, குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 33-பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் சூதாட்டம் மது பாட்டில்கள், சேவல் சண்டை, குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 33-பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஆணையின் பேரில் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம், மதுவிலக்கு அமலாக்கக் காவல்துறையினர் மற்றும் உட்கோட்ட காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்டத்திற்கு விரோதமாக மது விற்பனை செய்த 27 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 130 மது பாட்டில்கள் மற்றும் 73 லிட்டர் கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம், கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சட்டத்திற்கு விரோதமாக 2 சேவல்களை வைத்து சூதாட்டம் விளையாடிய செல்வராஜ் மற்றும் நந்தகுமார் ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 2 சேவல் மற்றும் ரூபாய் 200/- பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் தாமோதரன் மற்றும் லெனின் ஆகியோர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சட்டத்திற்கு விரோதமாக லாட்டரி சீட்டுகளை வைத்து விற்பனை செய்த வசந்த், தினேஷ், முகம்மது அப்பாஸ் மற்றும் கார்த்தி ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 3380/-,வண்டி-1, மற்றும் கைபேசி-1 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை-7708100100 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்குத் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியங்கள் காக்கப்படும்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...