கோவை மாவட்டம் முழுவதும் எஸ்.பி. செல்வ நாகரத்தினம் உத்தரவின்பேரில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி.!! பொதுமக்கள் பாராட்டு.!!

கோவை: கோவை மாவட்டம் முழுவதும் எஸ்.பி.செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் எஸ்.பி.செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, பேரூர், பெரியநாயக்கன்பாளையம், வால்பாறை, பகுதிகளில் மாவட்ட எஸ்.பி செல்வனகரதினம் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கொரோனா தடுப்பு ஊசி ஒழுங்கு செய்திருந்தன. அதில் பொதுமக்களுக்குப் பலர் பயன் பெற்றனர்.

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டதன் பேரில்.....



பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டியன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பங்கேற்று காவல் நிலைய பகுதியில் காவலர் குடும்பங்களுக்கு மருத்துவ குழுவின் உதவியுடன் சுமார் 150 கோவிட் சீல்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.



வால்பாறை உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் மேற்பார்வையில் ஆனைமலை காவல்நிலைய உதவி ஆய்வாளர் சின்னக்காமனன் அவர்கள் பங்கேற்று பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு நரசிம்மன் நகர் பகுதியில் மருத்துவக்குழுவினர் உதவியுடன் சுமார் 150 கோவிட் சீல்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.



பேரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமால் மேற்பார்வையில் மதுக்கரை காவல் நிலைய ஆய்வாளர் வைரம் மற்றும் க.க.சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன் பங்கேற்று எட்டிமடை பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு மருத்துவக் குழுவினர் உதவியுடன் சுமார் 150 கோவிட் சீல்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.



பொள்ளாச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ்மணி மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பங்கேற்று அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மருத்துவ குழுவினர் உதவியுடன் சுமார் 150 கோவிட் சீல்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.



இந்த தடுப்பூசி முகாம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று பொதுமக்கள் காவல் துறையினரைப் பாராட்டினர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...