தொடர் மழை காரணமாக செருப்பு தைக்கும் தொழிலாளி வீடு இடிந்து விழுந்து விபத்து.!! அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர்.!!

கோவை: தொடர் மழை காரணமாகச் செருப்புத் தைக்கும் தொழிலாளி வீடு இடிந்து விழுந்தது அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர்.



கோவை: தொடர் மழை காரணமாகச் செருப்புத் தைக்கும் தொழிலாளி வீடு இடிந்து விழுந்தது அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர்.

தொடர் மழை காரணமாகச் செருப்புத் தைக்கும் தொழிலாளி ஓட்டுவீடு திடீரென இடிந்து விழுந்தது. வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

கோவை உருமாண்டம்பாளையம் மாநகராட்சி 43 -வது வார்டு ஜீவா வீதியில் வசிப்பவர் பழனி என்பவரின் மகன் 58 வயதான முருகன். இவர் ஒரு மாற்றுத் திறனாளி. மேலும் செருப்பு தைக்கும் தொழிலாளியாக உள்ளார்.

இவரது மனைவி ரங்கம்மாள், மகன் தங்கராஜ், மகள் வேல்மணி, மருமகள் கஸ்தூரி மற்றும் 2-பேத்திகளுடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த 2-நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலையிலிருந்து இன்று காலை வரை மழை பெய்தது. அதுவும் இரவு முழுவதும் மழை தொடர்ந்து பெய்தது.

இந்தநிலையில், இன்று காலை 7-மணியளவில் இவர்கள் வீட்டின் முன் பகுதியிலிருந்த போது வீட்டின் பின் பகுதியிலுள்ள ஓடுகள் இடிந்து சத்தத்துடன் விழுந்துள்ளன.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை. இந்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...