கிணத்துக்கடவில் குற்ற சம்பவங்களை தடுக்க கடைகள், ஓட்டல்கள், நகை கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்- காவல் துறையினர் வலியுறுத்தல்!!

கோவை: கிணத்துக்கடவில் குற்றச்சம்பவங்களைத் தடுக்க கடைகள், ஓட்டல்கள், நகை கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என காவல் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.


கோவை: கிணத்துக்கடவில் குற்றச்சம்பவங்களைத் தடுக்க கடைகள், ஓட்டல்கள், நகை கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என காவல் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும், திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்க வகையில் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவுப்படி, கிணத்துக்கடவு காவல் நிலையம் சார்பில் வணிக வளாகம் மற்றும் கடைகள், ஓட்டல்கள், அடமான கடை நகைக் கடை ஆகிய இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று கடை உரிமையாளரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இதுகுறித்து, கடை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நோட்டீஸ் அச்சிடப்பட்டு காவல் துறையினர் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.



மேலும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாராவது தென்பட்டாலும் கிணத்துக்கடவு காவல் நிலைய தொலைப்பேசி எண் 9498101181 என்ற எண்ணத்தில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...