கோவை மாவட்டத்தில் சிறந்த முறையில் செயல்பட்ட 25 ஆசிரியர்களின் பெயர்கள் நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரை - அதிகாரிகள் தகவல்!

கோவை: கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 25 ஆசிரியர்களின் பெயர்கள் மாநில நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 25 ஆசிரியர்களின் பெயர்கள் மாநில நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதும், மாநில அரசு சார்பில் மாநில நல்லாசிரியர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான வரும் 5ம் தேதி மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்படவுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கோவையைச் சேர்ந்த 25 ஆசிரியர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு, பட்டியல் தயாரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில் -

மாநில நல்லாசிரியர் விருது பெற ஆசிரியர்கள் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

இதனை கருத்தில் கொண்டு கோவை மாவட்டத்தில் 25 ஆசிரியர்களின் பெயர் பட்டியல் தயாரித்து விருது பெற சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில் தகுதியுடைய ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...