கோவை: பொள்ளாச்சி - கோவை ரோடு அருகே இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் மினி லாரி கவிழ்ந்து விபத்தில் லாரி ஓட்டுனர் உட்பட இருவர் காயமடைந்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன்(22). இவர் இன்று காலை பணிக்கு ஆட்களை ஏற்றிச் செல்வதற்காக கிணத்துக்கடவில் இருந்து பொள்ளாச்சி நோக்கி மினி லாரியில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, ஆச்சிப்பட்டி அருகே இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்ததால், லாரியை நிறுத்த முயற்சி செய்துள்ளார். கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுனரும், இருசக்கர வாகனத்தில் வந்தவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

பின்னர், இதுகுறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொள்ளாச்சி தாலுகா போலீசார், இருவரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.