கோவை: காரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தவர்களை விரட்டி சென்று பிடித்த காவல்துறையினரை காவல்துறை எஸ்.பி செல்வ ரத்தினம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

கோவை மாவட்டம் சூலூர் தாலுகா பகுதியில் காவல்துறை வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது மின்னல் வேகத்தில் ஒரு கார் அவர்களைக் கடந்து சென்றது. உடனடியாக நிறுத்த முயன்றபோது அந்த கார் நிற்காமல் சென்றது.
உடனடியாக விரட்டிச் சென்ற காவலர்கள் அந்த கார் ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு காட்டுக்குள் குற்றவாளிகள் தப்பி ஓடினர்.
தொடர்ந்து காவல்துறை விரட்டிச் சென்று குற்றவாளிகளைப் பிடித்து விசாரணை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவது தெரிய வந்தது. உடனடியாக அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரபிரசாத் மற்றும் இரண்டு காவலர்கள் செல்லப்பாண்டி, பிரபு ஆகியோர் நீலம்பூர் சுங்க சாவடி அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியாக அதிவேகமாக வந்த காரை வழி மறித்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது.
இதனால் காவல்துறைக்குச் சந்தேகம் ஏற்பட்டு அந்தக்காரை 2 கிலோ மீட்டர் தூரம் ஜீப்பில் துரத்திக் சென்றனர். போலீஸார் துரத்தி வருவதை பார்த்த அந்த வாலிபர்கள் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி விட்டு அதிலிருந்து இரண்டு பேரும் இறங்கி காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடினர். இருப்பினும் காவல்துறை விடாமல் துரத்திச் சென்று, அவர்களைப் பிடித்து விசாரித்தனர்.

அப்போது இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சட்டவிரோதமாகத் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தனர் என்றும், மேற்படி மகேந்திரா மற்றும் அசோக் இரண்டு நபர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து 200 கிலோ கிராம் குட்கா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தைப் பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இவ்வழக்கில் திறம்படச் செயல்பட்ட காவல்துறையினரைக் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். செல்வநாகரத்தினம், அவர்கள் பாராட்டினார்.