பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்.!!

கோவை: பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.


கோவை: பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளன. இதில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் கல்லூரிகளில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இன்று பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் உள்ள என்.ஜி.எம் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி செலுத்த முகாம் நடைபெற்றது.இந்த சிறப்பு முகாமை கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் துவக்கி வைத்தார்.

நிர்வாக மேலாளர் ரகுநாதன், சக்தி மேலாண்மை கல்லூரி இயக்குனர் சுப்பிரமணியம் உள்ளிட்ட கல்லூரி நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் கல்லூரி உடற்கல்வி துறை மற்றும் என்.சி.சி, என்.எஸ்.எஸ் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

மாணவர்கள், ஆசிரியர்கள் என 500 பேருக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், நாளை நடக்க உள்ள முகாமிலும் 500 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.



மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஆர்வத்துடன் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...