நாளை (செப் 1) போத்தனுர் - பொள்ளாச்சி இடையே மின்சார என்ஜின் சோதனை ஓட்டம்

கோவை: கோவை: நாளை (செப் 1) காலை 8 மணியில் இருந்து பகல் 12 மணிக்குள் 25 கிலோவாட் மின் ஆற்றல் செலுத்தி, சோதனை ஓட்டம் நடைபெறும்.


கோவை: கோவை: கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போத்தனூா் - கிணத்துக்கடவு - பொள்ளாச்சி இடையே அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணி நிறைவடைந்ததை அடுத்துபோத்தனுர் -பொள்ளாச்சி - போத்தனுர் இடையே மின்சார என்ஜின் இயக்கி ரயில்வே அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளவுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நாளை (செப் 1) காலை 8 மணியில் இருந்து பகல் 12 மணிக்குள் 25 கிலோவாட் மின் ஆற்றல் செலுத்தி, இந்த சோதனை ஓட்டம்நடைபெறவுள்ளது. சோதனை ஓட்டத்தின் போது, மின்சார என்ஜினுக்கு கிடைக்கும் மின் ஆற்றல் குறித்து இரயில்வே அதிகாரிகளால் ஆய்வு மேற்கொள்ளப்படும். 

எனவே, பொதுமக்கள் மின்சார கம்பிகள் அருகில் செல்லவோ, ரயில்கள் மீது ஏறவோ, உயர்மட்ட பாலத்தில் இருந்து மின்சார கம்பி மீது ஏதேனும் பொருட்களை வீசவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், கடவு பாதைகளை கடக்கும் கனரக வாகனங்கள், அனுமதிக்கப்பட்ட உயரத்திற்கு மேலே பொருட்கள் ஏற்றி செல்ல கூடாது எனவும் எச்சரித்துள்ளனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...