கோவை: கோவை: நாளை (செப் 1) காலை 8 மணியில் இருந்து பகல் 12 மணிக்குள் 25 கிலோவாட் மின் ஆற்றல் செலுத்தி, சோதனை ஓட்டம் நடைபெறும்.
கோவை: கோவை: கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போத்தனூா் - கிணத்துக்கடவு - பொள்ளாச்சி இடையே அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணி நிறைவடைந்ததை அடுத்துபோத்தனுர் -பொள்ளாச்சி - போத்தனுர் இடையே மின்சார என்ஜின் இயக்கி ரயில்வே அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளவுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நாளை (செப் 1) காலை 8 மணியில் இருந்து பகல் 12 மணிக்குள் 25 கிலோவாட் மின் ஆற்றல் செலுத்தி, இந்த சோதனை ஓட்டம்நடைபெறவுள்ளது. சோதனை ஓட்டத்தின் போது, மின்சார என்ஜினுக்கு கிடைக்கும் மின் ஆற்றல் குறித்து இரயில்வே அதிகாரிகளால் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
எனவே, பொதுமக்கள் மின்சார கம்பிகள் அருகில் செல்லவோ, ரயில்கள் மீது ஏறவோ, உயர்மட்ட பாலத்தில் இருந்து மின்சார கம்பி மீது ஏதேனும் பொருட்களை வீசவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கடவு பாதைகளை கடக்கும் கனரக வாகனங்கள், அனுமதிக்கப்பட்ட உயரத்திற்கு மேலே பொருட்கள் ஏற்றி செல்ல கூடாது எனவும் எச்சரித்துள்ளனர்.