கோவை: கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிதி நிறுவன உரிமையாளருக்கு ரூபாய். 2.76 கோடி அபராதம் மற்றும் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செயல்பட்டு வந்த மேய்ஸ் குரூப் ஆப் டெக்னாலஜி (Maze group of technology) என்ற நிறுவனம், முதலீடு தொகைக்கு 10 நாட்களில் இரட்டிப்பாகப் பணம் தருவதாகக் கூறி, விளம்பரம் செய்துள்ளனர். அந்த விளம்பரத்தைப் பார்த்த பொதுமக்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
ஆனால், அறிவித்தது போல், தொகையைத் தராமல் ஏமாற்றியதை அடுத்து, பாதிக்கப்பட்ட முதலீட்டாளரான சின்னசாமி என்பவர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், கடந்த 2010 ல் வழக்குப் பதிவு செய்த சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர், 86 முதலீட்டாளர்களிடம் ரூபாய் 4 கோடியே 96 லட்சத்து 30 ஆயிரத்து 862 மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்தனர்.
கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கு விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
மோசடியில் ஈடுபட்ட, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட 8 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த புகழேந்திக்கு மட்டும் 10 ஆண்டு சிறைத் தண்டனையும் , ரூபாய் 2 கோடியே 76 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், விதிக்கப்பட்ட அபராத தொகையில் ரூபாய் 2 கோடியே 75 லட்சத்தைப் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்குத் திருப்பி வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பின் போது, இன்று நீதிமன்றத்தில் குற்றவாளியான புகழேந்தி ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, நிறுவனத்தின் மற்றொரு உரிமையாளரான இந்த வழக்கில் 2 வது நபராகச் சேர்க்கப்பட்ட ராஜா மீதான வழக்கு தனியாகப் பிரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதவிர, நிறுவன ஊழியர்களான 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மீதான வழக்கு நிரூபிக்கப்படாததால் 5 பேரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்நிறுவன உரிமையாளர்களான புகழேந்தி, ராஜா ஆகிய இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.