கோவை: வால்பாறையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மறைந்த முன்னால் முதல்வர் பெயரில் இயங்கி வரும் ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை அண்ணா பல்கலைக் கழகத்தோடு இணைப்பதாக சட்டப்பேரவையில் அறிவித்ததைத் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை கூட்டத் தொடரைப் புறக்கணித்து அ.இ.அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சென்னை வாலாஜா சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் உள்பட அ.இ.அ.தி.மு.கவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

அதற்கு கண்டனம் தெரிவித்து கைது செய்ததை விடுவிக்கக்கோரியும், ஆளும்கட்சியின் பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிடக்கோரி கோஷங்களும் எழுப்பினர்.

அதிமுக நகர துணை செயலாளர் பொன் கணேசன் தலைமையில், மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் ஜெபராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் ஆர்.ஆர்.பெருமாள், மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் நரசப்பன், நகர அம்மா பேரவை இணைச்செயலாளர், ஆர்.ஆர்.சசிக்குமார், நகர தகவல் தொழில்நுட்பச் செயலாளர் சண்முகம், ஆகியோர் முன்னிலையில் நகரக் கழகத்தின் சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியின் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.