கோவை: ஊரக பகுதிகளில் பணிபுரியும் தொகுப்பூதிய தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் நலச்சங்கத்தினர் கோவை மாவட்ட அலுவலகத்தில் மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில் கோவை மாவட்ட கிராம ஊராட்சிகளில் மக்கள் தொகையின் அடிப்படையில் கூடுதல் தூய்மை பணியாளர்களாகப் பணி நியமனம் செய்யப்பட்ட தொகுப்பூதிய பணியாளர்களுக்கு அரசாணை எண் 385ல் கூறப்பட்டுள்ள காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 3 ஆண்டுகள் பணி முடித்த தொகுப்பு ஊதிய தூய்மை பணியாளர்களுக்குச் சிறப்பு காலமுறை ஊதியம் 6094 ரூபாயை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இந்த மனுக்களை அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி வருவதாகவும் தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் நலச்சங்கத்தினர் தெரிவித்தனர்.