பொள்ளாச்சி ஆழியாறு அணை முழு கொள்ளளவை எட்டியது - பாதுகாப்பு கருதி 4 மதகுகள் வழியாக உபரி நீர் திறப்பு!

கோவை: மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால், பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி 4 மதகுகள் வழியாக உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.


கோவை: மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால், பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி 4 மதகுகள் வழியாக உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியை அடுத்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில், கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தின் தொகுப்புகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால், சோலையாறு அணை 160 அடியை எட்டியது. பரம்பிக்குளம் அணை 70 அடியை எட்டியது. இதில், 120 அடி உயரம் கொண்ட ஆழியாறு அணை நேற்றைய நிலவரப்படி 118.55 அடி உயரத்தை எட்டியிருந்தது.

இந்நிலையில், மழைப்பொழிவு காரணமாகவும், காடம்பாறை அணையில் மின் உற்பத்தி காரணமாகவும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆழியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1284 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியது.



இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று 4 மதகுகள் வழியாக வினாடிக்கு 440 கன அடி உபரி நீரை திறந்து விட்டனர்.

மேலும், பொள்ளாச்சி கால்வாய், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் மற்றும் ஆற்றுப்படுகை வழியாக விநாடிக்கு 625 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோர கிராமங்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...