பொள்ளாச்சி அருகே 17-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... 20-வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது.!!

கோவை: பொள்ளாச்சி அருகே 17-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 20-வயது இளைஞரை போக்சோ சட்டத்தில் காவல்துறை கைது செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே 17-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 20-வயது இளைஞரை போக்சோ சட்டத்தில் காவல்துறை கைது செய்தனர்.

பொள்ளாச்சி அருகே ஆனைமலை பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள தென்னை நார் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

இவர் பணிக்குச் செல்லும்போது, பேருந்து நிலையத்தில் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞரைச் சந்தித்துள்ளார். இருவரும் தங்களது மொபைல் எண்களைப் பகிர்ந்து, அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் பழநியில் உள்ள கோயிலில் திருமணம் செய்துள்ளனர். சிறுமியைக் காணவில்லை எனப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, கோட்டூர் காவல்துறை நடத்திய விசாரணையில் சிறுமி அருப்புக்கோட்டையில் இருப்பது தெரியவந்தது.

சிறுமியை மீட்ட காவல்துறை பின்பு சிறுமியிடம் நடத்திய விசாரணையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல்துறை கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...