வால்பாறையில் ஆபத்தை உணராமல் ஆற்றில் குளிக்கும் சுற்றுலாப்பயணிகள்.!! நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.!!

கோவை: வால்பாறையில் சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் இறங்கிக் குளிப்பதைத் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் இறங்கிக் குளிப்பதைத் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. வால்பாறைக்குக் கோவை திருச்சி, திருப்பூர், ஈரோடு, சென்னை, மதுரை உட்பட பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வால்பாறைக்கு வந்து செல்கின்றனர்.

தமிழகம் மட்டுமின்றி கேரளா கர்நாடகா பாண்டிச்சேரியிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கொரானா தொற்று காரணமாக வால்பாறைக்கு வரத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது வால்பாறையில் நல்ல சீதோஷண நிலை விளங்குவதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இன்று வால்பாறைக்கு வந்துள்ளனர். தற்போது வால்பாறையில் சோலையார் அணை நீர்ப்பிடிப்பு பகுதியான சின்னக்கல்லார் மற்றும் நீரார் அணைப் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக முக்கிய சுற்றுலாத் தலமான கூழாங்கல் ஆற்றில் 2000 கன அடிக்கு மேற்பட்ட தண்ணீர் சென்று கொண்டுள்ளது. மேலும் மழையின் காரணமாக திடீரென நீர் உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.



பாதுகாப்பு கருதி ஆற்றில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் நடு ஆற்றில் குளித்தும் ஆற்றில் இறங்கி செல்பி எடுத்தும் வருகின்றனர்.

உயிர்ப்பலி ஏற்படும் முன் நகராட்சி வருவாய்த்துறை காவல்துறை இணைந்து சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் இறங்கிக் குளிப்பதைத் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...