கோவை: திருமண மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்த தாசில்தாரிடம் ஒரு வாரத்திற்கு முன் அனுமதி பெறவேண்டும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் உட்படக் கோவையில் இரண்டாம் அலை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் சார்பாக பல்வேறு தரவுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதில் திருமண மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்த அந்தந்த பகுதி தாசில்தார்களிடம் ஒரு வாரத்திற்கு முன்பு அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை, திருமண மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்துவோர், ஒரு வாரம் முன் தாசில்தாரிடம் அனுமதி பெற வேண்டும் என்று கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் தடுக்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டியது, பொதுமக்களின் கடமை. மண்டபங்களில் நடக்கும் திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை ஒரு வாரத்துக்கு முன் சம்பந்தப்பட்ட தாசில்தார்களிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.
மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து நிலையான இயக்க நடைமுறைகளையும் பின்பற்றி 50 நபர்களுக்கு மிகாமல் திருமணம், இதர நிகழ்ச்சி நடத்தலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.