வால்பாறையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெற அழைப்பு..!

கோவை: வால்பாறையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: வால்பாறையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஒரு பெண்குழந்தை மட்டுமே இருந்தால் 50 ஆயிரம் ரூபாயும் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25 ஆயிரம் ரூபாயும், 18 வயது பூர்த்தியடைந்த பின் முதிர்வு தொகையோடு வட்டியும் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் முறையாக விண்ணப்பித்து அசல் வைப்பு நிதி பத்திரம் வைத்துள்ள பயனாளிகள் 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் தங்களுக்கு வழங்கியுள்ள அசல் பத்திரம், பயனாளியின் போட்டோ, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பயனாளி பெயரில் துவங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சமர்பித்து முதிர்வு தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் அதற்கான நிதியும் சம்பந்தப்பட்ட துறைக்கு தற்போது அரசிடமிருந்து வந்துள்ள நிலையில், முதிர்வு தொகை பெறாமல் இருந்து வருகின்றனர்.

எனவே, வால்பாறை வட்டாரத்தில் உள்ள பயனாளிகள் அனைவரும் 94424 85301 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று சமூக நலத்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...