கோவை: வால்பாறை அண்ணா நகரில் மண்சரிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், வால்பாறை பகுதியிலுள்ள அண்ணா நகர் மாரியம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ள கட்டிடம் தொடர்மழையால் இன்று திடீரென சரிந்து விழுந்து அருகே உள்ள குடியிருப்புப்பகுதி கூரைகளிலும், வீடுகளிலும் விழுந்தது. இதனால், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும், அவ்வழியாக யாரும் செல்லமுடியாத அளவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையாளர் மற்றும் வட்டாட்சியர் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் மண்சரிவு ஏற்பட்ட பகுதியை ஆய்வு மேற்கொண்டு உடனடியாக மறுசீர் செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.