வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா ஆலோசனைக் கூட்டம்!

கோவை: கோவை வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் வரும் செப்டம்பர் 10ம் தேதி வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் 12ம் தேதி நடைபெற இருக்கும் விசர்ஜன ஊர்வலம் பற்றிய ஆலோசனைக்கூட்டம் வால்பாறையிலுள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் இந்து முன்னணி நகரப் பொதுச்செயலாளர் ஏ.எஸ்.டி.சேகர் தலைமையில் நகரத் தலைவர் சதீஷ், ஒன்றிய தலைவர் யு.ஜெயன், ஒன்றிய பொதுச்செயலாளர் சி.வி.ரவீந்திரகுமார் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குக் கோவை கோட்ட செயலாளர் டி.பாலச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அதனைத்தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தி தினத்தன்று 101 சிலைகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முறையாக பிரதிஷ்டை செய்வதெனவும், 12ம் தேதி நடைபெற இருக்கின்ற விசர்ஜன ஊர்வலத்தில் கொரோனா காலத்தைக் கருத்தில் கொண்டு உரிய பாதுகாப்புடன் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி விழாவை சிறப்பிக்க வேண்டும் என்றும் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாட்களிலிருந்து விசர்ஜன ஊர்வலம் முடியும் வரை காவல் துறையினரின் ஆலோசனைக்கு இணங்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்து முன்னணியின் முடீஸ் நகர செயலாளர் பிரஸ் பாலன், ஒன்றிய செயலாளர் வெற்றி வேல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில் கூட்டமுடிவில் நகர துணைத் தலைவர் எஸ்.ஆனந்த் நன்றி கூறினார்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...