7-வது வார்டு பகுதியில் மாநகராட்சியின் பல்வேறுகட்ட பணிகள் குறித்து துணை மாநகராட்சி ஆணையர் ஆய்வு



கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 7-வது வார்டுக்கு உட்பட்ட இடையர்பாளையம், தேவாங்க நகர் பகுதியில் மீட்கப்பட்ட மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடத்தை மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி புதனன்று (இன்று) நேரில் சென்று  பார்வையிட்டார். 



இதைத்தொடர்ந்து, இடையர்பாளையத்தில் உள்ள வ.ஊ.சி வீதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் வாரியம் கால்வாய் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின், ஜே.ஜே.நகர் பகுதியில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தினை தண்ணீர் தொட்டியில் ஊற்றுவதையும், தேவையற்ற பொருட்களை அகற்றுவதையும் ஆய்வு செய்தார்.







பின், ஜே.ஜே.நகருக்கு உட்பட்ட ரங்கம்மாள் வீதியில் மாநகராட்சி பொது கழிப்பிடத்தையும், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதியுடன் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி ஆணையர் கே.ராமைய்யா, உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...