கோவை கணபதி அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில் பசுமாடு பலி..!

கோவை: கோவை கணபதி, மருதையா நகர் அருகே தனியார் தோட்டத்தில் இன்று மதியம் மின்கம்பி அறுந்து விழுந்ததில் மேய்ச்சலுக்காக விடப்பட்ட  பசுமாடு உயிரிழந்தது.


கோவை: கோவை கணபதி, மருதையா நகர் அருகே தனியார் தோட்டத்தில் இன்று மதியம் மின்கம்பி அறுந்து விழுந்ததில் மேய்ச்சலுக்காக விடப்பட்டபசுமாடு உயிரிழந்தது.

இதுகுறித்து, தோட்டத்து உரிமையாளர் சரவணகுமார் கூறுகையில், " எங்கள் தோட்டத்தில் வழக்கம்போல் இன்றுபசுமாடு மேய்ச்சலுக்கு விடப்பட்டது. வெகுநேரமாகியும் மாடு திரும்பாததால், நாங்கள் சென்று பார்த்தோம். அப்போது, மின் கம்பி அறுந்து விழுந்ததில் பசுமாடு உயிரிழந்தது தெரியவந்தது.



விபத்து குறித்து உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தோம். ஆனால், அவர்கள் சரிவர பதில் அளிக்க மறுத்துவிட்டனர். ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு மின்வாரியம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மின்கம்பி அறுந்து விழுந்த இடம் தோட்டத்தின் வெளிப்புறத்தில் நாங்கள் பயன்படுத்தாத இடத்தில் அமைந்துள்ளது.

சம்பவம் நடந்த இடம் அருகே, காலை நேரத்தில் பலர் இயற்கை உபாதை கழிக்க பயன்படுத்தப்படும் இடமாகும். எனவே, காலையில் இந்த சம்பவம் நடந்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பலியான பசுமாடு ஒரு மாதத்துக்கு முன்புதான் கன்று ஈன்றது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...