கோவை: குழந்தைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவர உடுமலைப்பேட்டையில் அமராவதி முதலைப்பண்ணைப் பூங்கா தயாராகி வருகிறது.
கோவை:
உடுமலைப்பேட்டையில் குழந்தைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவர அமராவதி முதலைப்பண்ணைப் பூங்கா தயாராகி வருகிறது.

உடுமலைப்பேட்டையை அடுத்துள்ள அமராவதி அணை அருகே முதலைப்பண்ணை இயங்கிவருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட முதலைகள் வனத்துறையால் பராமரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படுகிறது. அமராவதி அணைக்கு சுற்றுலா வருபவர்கள் முதலைப் பண்ணைக்குச் சென்று முதலைகளை நேரில் கண்டு செல்வார்கள்.

இங்கு முதலைகள் மட்டும் உள்ளதால் நீண்ட நேரம் அவைகளை மட்டுமே கண்டு பொழுதைக் கழிக்க முடியாது.
எனவே, அந்தப் பகுதியை பூங்காவாக மாற்றி குழந்தைகள் விளையாடிச் செல்ல ஏராளமான விளையாட்டு உபகரணங்களை பொருத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். குழந்தைகள் பூங்காவாக மாற்றி வனத்துறையினர் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், முதலை, மான், புலி, யானை, கரடி உள்ளிட்ட விலங்குகளின் உருவம் கொண்ட விளையாட்டு உபகரணங்கள் ஏராளமாக நிறுவப்பட்டுள்ளது. இதனால் இங்கு வரும் குழந்தைகள் ஆடிப்பாடி மகிழ்ச்சியாக செல்வார்கள் என்கின்றனர் வனத்துறையினர்.

இதனிடையே, தற்போது கொரோனா தொற்று காரணமாக பூங்காக்கள் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படவில்லை. அரசு தளர்வுகளை நீக்கிய பிறகு இந்த பூங்காவை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம்.