கோவை: பொள்ளாச்சியில் மருத்துவக் கழிவுகளைச் சேகரித்துப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குப் பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
மேலும் கொரோனா நோயாளிகள் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்காக நூற்றுக்கணக்கானவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் உடல்கூறு ஆய்வு கட்டிடம் அருகே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த ரத்தக்கசிவு படிந்த கழிவுகள், மற்றும் நோயாளிகளுக்குப் பயன்படுத்திய சிரஞ்சுகள், உடல்கூறு ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்ட கழிவுகள் அனைத்தும் மருத்துவமனை வளாகத்தில் திறந்த வெளியில் கொட்டப்பட்டுள்ளது.
மேலும் ஆங்காங்கே மனிதக் கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளதால் அப்பகுதி சுகாதார சீர்கேட்டின் புகலிடமாக இடமாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகளுக்கு மேலும் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவக் கழிவுகளைச் சேகரித்துப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.