கன்னியாகுமரியில் துவங்கி ராஜ்கோட் வரை 75-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் விதமாக சி.ஆர்.பி.எப். வீரர்கள் செல்லும் சைக்கிள் தொடர் பயணம் கோவை வந்தது.!!

கோவை: கன்னியாகுமரியில் துவங்கி ராஜ்கோட் வரை 75-வது சுதந்திர தினவிழாவைக் கொண்டாடும் விதமாக சி.ஆர்.பி.எப். வீரர்கள் செல்லும் சைக்கிள் தொடர் பயணம் கோவை வந்தடைந்தது.


கோவை: கன்னியாகுமரியில் துவங்கி ராஜ்கோட் வரை 75-வது சுதந்திர தினவிழாவைக் கொண்டாடும் விதமாக சி.ஆர்.பி.எப். வீரர்கள் செல்லும் சைக்கிள் தொடர் பயணம் கோவை வந்தடைந்தது.

கோவை வந்த வீரர்களுக்கு ரோட்டரி கிளப் ஸ்பெக்ட்ரம் சார்பாகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவைக் கொண்டாடும் விதமாக மத்திய காவல் படையைச் சேர்ந்த 15வீரர்கள் கன்னியாகுமரி முதல் டெல்லி ராஜ்கோட் வரை 'ஆசாதி க அம்ருத் மஹோத்சவ' என்ற தலைப்பில் விழிப்புணர்வு தொடர் சைக்கிள் பயணத்தை துவக்கியுள்ளனர்.

கடந்த 22ம் தேதி துவங்கிய இந்த தொடர் சைக்கிள் பயணம் ஒவ்வொரு குழுவாகத் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக 2850 கிலோ மீட்டர் பயணம் செய்து, வரும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று டெல்லி ராஜ் கோட்டை சென்றடையவுள்ளனர்.



இந்நிலையில், தொடர் சைக்கிள் பயணம் செய்யும் வீரர்கள் கோவை வந்தடைந்தனர். கோவை வந்த சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு ரோட்டரி கிளப் ஆப் ஸ்பெக்ட்ரம் சார்பாக வரவேற்பு விழா நடைபெற்றது. இதில் பயிற்சி மைய ஐ.ஜி. சதீஷ் சந்திர வர்மா வீரர்களைப் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் ஸ்பெக்ட்ரம் தலைவர் பாவிக் முமையா,தலைமையில் நடைபெற்ற இதில், சிறப்பு அழைப்பாளராக ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜசேகர் சீனிவாசன் கலந்து கொண்டார்.

விழாவில் நிர்வாகிகள் முரளி பாலகிருஷ்ணன், சம்பத் குமார், அருள் குமரன், முத்துக் குமார், நிஷித், சுப்ரமணியம் மற்றும் மகேஷ் குமார், செந்தில்நாதன், செல்லராகவேந்திரன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.



தொடர்ந்து கோவை பயிற்சி மையத்தைச் சேர்ந்த 15 வீரர்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். பயணம் செய்யும் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக ரோட்டரி கிளப் ஆப் ஸ்பெக்ட்ரம் சார்பில் கோவையில் உள்ள சைக்கிள் குழுக்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் சைக்கிள்களில் 30 கிலோ மீட்டர் வரை வீரர்களுடன் உடன் சென்றனர்.

கோவையிலிருந்து கிளம்பும் இக்குழு அடுத்ததாகக் கர்நாடக மாநிலம் பெங்களூர் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...