கோவை: கோவை கிராமப்புறங்களில், முதியவர்களை குறிவைத்து நவீன முறையில் பணம் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதால், விழிப்புடன் இருக்க, சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை: கோவை கிராமப்புறங்களில், முதியவர்களை குறிவைத்து நவீன முறையில் பணம் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதால், விழிப்புடன் இருக்க, சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
கிராமப்புற மக்களின் அச்சம், அப்பாவித்தனம் இன்றைய நவீன திருடர்களுக்கு வசதியாக அமைந்து விட்டது. இதனால், அத்தகைய அப்பாவி மக்களை குறிவைத்து, சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கிராமப்புற மக்களிடம் வங்கிக்கணக்கின், ஓ.டி.பி, காலாவதியாகப் போகிறது, என்றதும், அவர்கள் அச்சமடைந்து உடனடியாக மொபைல்போனுக்கு வரும், பாஸ்வேர்டை தெரிவித்து விடுகின்றனர்.
இதை, பயன்படுத்தும் மோசடி பேர் வழிகள், உடனடியாக வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை திருடி விடுகின்றனர். இதே போல், பென்ஷன் வாங்கும் முதியவர்களை குறிவைத்தும், மோசடிகள் நடக்கின்றன. இத்தகைய மோசடிகளை தவிர்க்க, விழிப்புடன் இருக்க வேண்டும், என, சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கோவை மாவட்ட சைபர் க்ரைம் போலீஸ் ஏ.டி.எஸ்.பி., சங்கு கூறியதாவது:-
பொதுவாகவே தற்போது, சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, கிராமப் புறத்தினர் மற்றும் முதியவர்களை குறிவைத்து மோசடிகள் நடக்கின்றன.
இதைத்தடுக்க, வங்கியில் இருந்து அழைப்பது போல், போன் அழைப்புகள் வரும்போது பதற்றப்படாமல் இருக்க வேண்டும். குறிப்பாக, மொபைல்போனுக்கு வரும் எந்த ஒரு தேவையற்ற அழைப்புகளையும், தகவல்களையும் தவிர்க்க கூடாது.
பென்ஷன்தாரர்கள் தங்களது வங்கிக்கணக்குகளை, பாதுகாப்புடன் கையாள வேண்டும். எக்காரணத்தை கொண்டும், தங்களது ஓ.டி.பி., எண்களை யாரிடமும் பகிரக்கூடாது. விழிப்புடன் இருந்தால் மோசடிகளை தடுக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.