கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில்‌ தூய்மைப்பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌ மற்றும்‌ மாநகராட்சி பள்ளியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா ஆய்வு.!!

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில்‌ தூய்மைப்பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌ மற்றும்‌ மாநகராட்சி பள்ளியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்கள்‌.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில்‌ தூய்மைப்பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌ மற்றும்‌ மாநகராட்சி பள்ளியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்கள்‌.

கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில்‌ தூய்மைப்பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌ குறித்தும்‌, மாநகராட்சி பள்ளிகள்‌ மற்றும்‌ பூங்காக்களில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., இன்று 27.08.2021 நேரில்‌ ஆய்வு மேற்கொண்டார்கள்‌.



கோயம்புத்தார்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ எண்‌.80,83 வார்டுகளுக்குட்பட்ட ராஜவீதி சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர், தூய்மைப்பணியாளாகளின்‌ வருகைப்‌ பதிவேடுகளை ஆய்வு செய்தார்.



பின்னர்‌, தூய்மைப்பணியாளர்கள்‌ நேரம்‌ தவறாமல்‌ பணிக்கு வருகை தர வேண்டும்‌. வீடுதோறும்‌ குப்பைகளை சேகரிக்கும்‌ போது மக்கும்‌ குப்பை, மக்காத குப்பை என தரம்‌ பிரித்துச் சேகரிக்க வேண்டும்‌.

மழைநீர் வடிகால்‌ கால்வாய்களில்‌ அடைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி நீர்‌ தேங்காமல்‌ செல்லும்‌ வகையில்‌ கால்வாயினை சுத்தப்படுத்திட வேண்டும்‌. கொசுவினால்‌ ஏற்படும்‌ நோய்களைத்‌ தவிர்க்கப் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டும்‌.

தூய்மையான மாநகராட்சியாகத் திகழ தங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாகச் செய்திட வேண்டும்‌. அனைவரும்‌ முகக்கவசம்‌ அணிந்து பணியாற்ற வேண்டும்‌. கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திட வேண்டும்‌. தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்‌ எனத் தெரிவித்தார்கள்‌.



தொடர்ந்து, வார்டு எண்‌.68க்குட்பட்ட ராமநாதபுரம்‌ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில்‌ ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌‌, பள்ளியின்‌ வகுப்பறைகள்‌, ஆய்வகங்கள்‌, மின்‌ வசதி, குடிநீர்‌ வசதி, கழிப்பறை வசதிகள்‌ ஆகியவற்றைக் குறித்து, பொறியியல்‌ பிரிவு அலுவலர்கள்‌ மற்றும்‌

ஆசிரியைகளிடம்‌ கேட்டறிந்து.



அங்கு பணியில்‌ ஈடுபட்டிருந்த பணியாளர்களிடம்‌ பள்ளியின்‌ உட்புற பகுதிகள்‌ மற்றும்‌ சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமெனத் தெரிவித்தார்கள்‌.



அதனைத்‌ தொடர்ந்து, வார்டு எண்‌.68க்குட்பட்ட வள்ளியம் மாள்‌ வீதியிலுள்ள மாநகராட்சி சிறுவர்‌ விளையாட்டுத்திடல்‌ மற்றும்‌ மாநகராட்சிப்‌ பூங்காவில்‌ ஆய்வு மேற்கொண்டு, பூங்காக்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அறிவுறுத்தினார்கள்‌.



இந்த ஆய்வின்போது, மத்திய மண்டல உதவி ஆணையாளர்‌ பார்வதி, உதவிப் பொறியாளர்‌ கமலக்கண்ணன்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ திருமால்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.



கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.32க்குட்பட்ட விளாங்குறிச்சி, மருதம்‌ நகர்ப்‌ பகுதியில்‌ மாநகராட்சிக்குப் பாத்தியப்பட்ட இடத்தில்‌ சாலையோரங்களில்‌ தேவையற்ற பிளாஸ்டிக்‌, இரும்பு போன்ற பொருட்களைக் கொட்டி சேமித்து அசுத்தம்‌ செய்து மழைநீர்‌ வடிகால்‌ கால்வாயில்‌ நீர்‌ செல்லாமல்‌ சுகாதாரத்தைப் பாதிக்கும்‌ வகையில்‌ செயல்பட்டதாலும்‌ அக்கடைக்கு மாநகராட்சி அலுவலர்களால்‌ ரூ.5000/- அபராதம்‌ விதித்து கடைக்குப் பூட்டி சீல்‌ வைக்கப்பட்டது.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...