கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சமீரன் தலைமையில் விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் இணையதளம் வாயிலாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட முழுவதும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்காக வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது:
தமிழக அரசு விவசாயிகளுக்குப் பயிர்க் கடன் வழங்க நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், புதிய நடைமுறை மூலம் விவசாயிகள் அதனைப் பெறுவதற்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பயிர்க் கடன் பெறப் பழைய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். புதிய நடைமுறையின் மூலம் சிட்டா, அடங்கல் போன்றவை பெற விவசாயிகள் மிகவும் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
கோவை மாவட்டம் முழுவதும் கால்நடைகளுக்குக் கோமாரி நோய்த் தொற்று தொடர்பாகத் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதனிடையே கால்நடைகளுக்குக் கால் சப்பை, வாய்ச் சப்பை நோய் பரவி வருகிறது.
இதனைத் தடுக்க மாவட்டம் முழுவதும் உள்ள கால்நடைகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். கால்நடை மருத்துவர்கள் அந்தந்த பகுதிகளில் தங்குவதற்கும் தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும்.
அனுமதி பெறாமல் ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய பூமிகளுக்கு அருகில் லே-ஆவுட் என்கிற பெயரில் 50-செண்ட் வரை நிலங்களை வாங்கி அங்கே ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படுகிறது.
இதனால் விவசாய நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. உடனடியாக இது போன்ற சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். கோவை மாவட்டம் வனப்பகுதியை ஒட்டியுள்ள ஆனைமலை பகுதியில் அர்த்தநாரி பாளையம், மஞ்சநாயக்கனூர், அங்கலகுறிச்சி, சேத்துமடை, புளியங்கண்டி, கரடிமடை, மதுக்கரை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பழைய முறைப்படி ஆடு, மாடுகள் மேய்க்க அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதாகக் கூறி கால்நடைகள் மேய்க்க அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் வெளியிலிருந்து தீவனங்கள் வாங்க வேண்டியுள்ளது. இதனால் விவசாயிகளுக்குச் செலவுகள் அதிகமாகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.