பொள்ளாச்சியில் ஆன்லைன் மோசடிகள் குறித்து பொதுமக்களிடம் சைபர் குற்றம் காவல்துறை விழிப்புணர்வு.!!

கோவை: பொள்ளாச்சியில் ஆன்லைன் மோசடிகள் குறித்து பொதுமக்களிடம் சைபர் குற்றம் காவல்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.


கோவை: பொள்ளாச்சியில் ஆன்லைன் மோசடிகள் குறித்து பொதுமக்களிடம் சைபர் குற்றம் காவல்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

கோவை சைபர் கிரைம் போலீஸார் சார்பில் நேற்று பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மற்றும் ஆழியார் பகுதிகளில் பொதுமக்களிடம் ஆன்லைன் மூலம் நடக்கும் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆய்வாளர் ஜெயதேவி, உதவி ஆய்வாளர் ரமேஷ், தலைமைக் காவலர்கள் சங்கர், அம்சவேணி ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்யும் நபர்களை நம்ப வேண்டாம் எனவும், தங்களுடைய புகைப்படத்தை முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதைத் தவிர்க்கவும், வெளியாட்களிடம், ஏடிஎம் கார்டு நம்பர், ஓடிபி நம்பர், வங்கி கணக்கு போன்ற பண வர்த்தனை தொடர்பான தகவல்கள் கொடுக்க வேண்டாம்.

சாதேக்கப்படும் விதமாக அழைப்புகள் வந்தால், உடனடியாக 24-மணி நேரமும் செயல்படக்கூடிய 155260-என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...