பொள்ளாச்சி ஆற்றுப்படுகையில் திதி கொடுக்க சென்றவர்களை மலைத் தேனீக்கள் கொட்டியதில், ஒருவர் பலி -13 பேர் படுகாயம்.!!

கோவை: பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் ஆற்றுப்படுகையில் திதி கொடுக்க சென்றவர்களை மலைத் தேனீக்கள் கொட்டியதில், ஒருவர் பலி -13 பேர் படுகாயம் அடைந்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் ஆற்றுப்படுகையில் திதி கொடுக்க சென்றவர்களை மலைத் தேனீக்கள் கொட்டியதில், ஒருவர் பலி -13 பேர் படுகாயம் அடைந்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார். கறிக் கடை நடத்தி வருகிறார். இவரது பாட்டி இறந்த 16-ஆம் நாள் திதி கொடுப்பதற்காக குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் வழியாகச் செல்லும் ஆழியாறு ஆற்றுப்படுகைக்குச் சென்றுள்ளனர்.



அப்போது, எதிர்பாராதவிதமாக, அங்கு இருந்த தேன் கூடு கலைந்து, மலைத் தேனீக்கள் கூட்டமாக வந்து பொது மக்களை சரமாரியாகக் கொட்டியது. இதில் ரமேஷ் தேனீக்கள் கொட்டியதில் மயக்கம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.



பின்னர், அங்கு சென்ற பொள்ளாச்சி தீயணைப்புத் துறை அதிகாரிகள் பொதுமக்கள் உதவியோடு, காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 13-பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த தாலுகா காவல் நிலைய போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...