பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் நான்கு நபர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல்.!!

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-பேர் கைது செய்யப்பட்டனர்.



கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ்குமார், வசந்த ராஜன், மணிவண்ணன் ஆகிய 5-பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் 2019ம் ஆண்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பொள்ளாச்சியைச் சேர்ந்த அருளானந்தம், ஹேரென்பால் , பாபு ஆகிய 3-பேரை சிபிஐ கைது செய்தது.

இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் பாதிக்கப்பட்ட 9-பெண்கள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொள்ளாச்சியைச் சேர்ந்த அருண் குமார் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கூடுதலாக 4-பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ,கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ அதிகாரிகள் கோவை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.



இந்நிலையில் விரைவில் கைதான 9-பேருக்கும் கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டு விசாரணையானது துவங்கப்பட இருக்கின்றது. சென்னை உயர் நீதிமன்றம் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தினமும் இந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கினை விசாரித்து. 6-மாத காலத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பொள்ளாச்சி பாலியல் வழக்கு தினம்தோறும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில், இந்த வழக்கில் கைதாகியுள்ள 9-பேருக்குக் கூடுதல் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட இருக்கிறது.

இந்நிலையில், இன்று ஒன்பது பேருக்கும் நீதிமன்ற காவல் முடிவடையும் நிலையில், வீடியோ கான்பிரசிங் மூலம் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவல் நீடிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது.

விரைவில் 9-பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் வழக்கு விசாரணை தினந்தோறும் நடத்துவதற்கான நடவடிக்கைகளையும் சிபிஐ அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...