கோவை மாநகராட்சி இணையதளத்தில் 2,886-தீர்மானங்கள் பதிவேற்றம்.!!

கோவை: கோவை மாநகராட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நிறைவேற்றப்பட்ட 2,886- தீர்மானங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.


கோவை: கோவை மாநகராட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நிறைவேற்றப்பட்ட 2,886- தீர்மானங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சியில் 2017-ஜூலை மாதம் முதல் 4-ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்ட 10- ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்களை மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என நீண்ட நாள்களாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் தியாகராஜன் தாக்கல் செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இதைத்தொடர்ந்து, மாநகராட்சி தீர்மானங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யக்கூடாது என ஒப்பந்ததாரர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இந்த இரு வழக்குகளில் நீதிமன்றம் எவ்வித தடை உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், மாநகராட்சி தீர்மானங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனக் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி, சமூக ஆர்வலர் தியாகராஜன், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு அளித்தார்.

இதைத்தொடர்ந்து, ஜூன் 18ம் தேதி முதல் மாநகராட்சி இணையதளத்தில், 2017 ஜூலை 19ம் தேதி முதல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, நேற்று வரை, மாநகராட்சி இணையதளத்தில் கடந்த 2017ம் ஆண்டு முதல் நிறைவேற்றப்பட்ட 2,886 தீர்மானங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...