கல்வி நிலையங்களில் செயல்பட்ட கொரோனா சிகிச்சை மையங்கள் மூடல்.!!

கோவை: பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் துவங்கப்படுவதையடுத்து கல்வி நிலையங்களில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது.



கோவை: பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் துவங்கப்படுவதையடுத்து கல்வி நிலையங்களில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது.

கோவையில் கடந்த மே மாதம் கொரோனா இரண்டாவது அலையின்போது தினசரி பாதிப்பு 4- ஆயிரத்தை கடந்தது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. இதையடுத்து பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இதையடுத்து, தற்போது ஏற்படுத்தப்பட்டு உள்ள உட்கட்டமைப்பு வசதிகளை அகற்றுவது இல்லை என்று மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இந்நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.

இதன் காரணமாக மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த கொரோனா சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால் உட்கட்டமைப்பு வசதிகள் அப்படியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் சமீரன் கூறியதாவது:-

கோவையில் அரசு கலைக்கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளன. பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுவதையொட்டி இந்த மையங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது.

புதிதாக கொரோனா நோயாளிகள் யாரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படமாட்டார்கள். தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கொடிசியா சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

கல்வி நிலையங்களில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் இருக்கும் உட்கட்டமைப்பு வசதிகள் எதுவும் அகற்றப்படாது, அப்படியே இருக்கும். மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்தால் இந்த மையங்கள் திறக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதால் இந்த மையங்கள் அனைத்தும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு உள்ளன. அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...