கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்கள் பொதுமக்களிடம் காவல்துறையின் அணுகுமுறை குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிப்பதற்காக புதிய முறையை கொண்டு வந்துள்ளார்.
கோவை:பொதுமக்களிடம் காவல்துறையின் அணுகுமுறை குறித்து கருத்துக்களை தெரிவிப்பதற்காக புதிய முறையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்,செல்வநாகரத்தினம்
கொண்டு அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம், கோவை மாவட்டம் அனைத்து உட்கோட்ட அலுவலகம், காவல் நிலையங்கள் மற்றும் காவல் அலுவலகத்தில் இயங்கக்கூடிய அனைத்து சிறப்பு பிரிவு (Special Unit) அலுவலகங்களின் நுழைவாயிலில் மக்கள் கருத்து கேட்கும் பெட்டி (Public Feedback box) வைக்கப்பட வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
அந்த பெட்டியில் மக்கள் அளித்துள்ள கருத்து படிவங்களை, ஒவ்வொரு மாதம் இறுதியில் படிவங்களை எடுத்தும் பிரதி மாதம் 1 ஆம் தேதி மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளரின் தனி அறிக்கையுடன் அனுப்பப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
கருத்துக்கள் குறித்தான படிவம் (Feedback Form) நிலைய வரவேற்பாளர்/நிலைய எழுத்தர் வசம் இருக்க வேண்டும் என்றும் இந்தப் படிவத்தை காவல் நிலையம் மற்றும் உட்கோட்ட அலுவலகம் அணுகி வரும் பொதுமக்களிடம் தங்களின் கருத்துக்களை தெரிவிப்பதற்காக வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், பொதுமக்களின் நன்மதிப்பை பெற்று சிறப்பாக பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.