கோவை: கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினத்திடம் அதிமுகவின் முன்னாள் பிரமுகரும், தற்போது திமுகவில் இணைந்துள்ள விஷ்ணு பிரபு என்பவர் புகார் மனு ஒன்றை அளித்தார்.
கோவை: கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினத்திடம்,அதிமுகவின் முன்னாள் பிரமுகரும், தற்போது திமுகவில் இணைந்துள்ள விஷ்ணு பிரபு என்பவர் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
அதிமுக இளம்பெண், இளைஞர் பாசறை மாநில துணை தலைவராக இருந்து அண்மையில்அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர் கோவையை சேர்ந்த விஷ்ணுபிரபு.
கடந்த சில தினங்களுக்கு முன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அதை குறித்து, நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த விஷ்ணு பிரபு, வேலுமணி குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்திருந்தார், அதில் ஆனைக்கட்டி பகுதியில் உள்ள சொகுசு பங்களாவில் இருந்து பணம் பல்வேறு இடங்களுக்கு அனுப்பபடுவதாகவும் பணம் பதுக்கி வைக்கும் மையமாகவும் அந்த இடம் செயல்படுவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், எஸ்.பி. வேலுமணியின் நெருங்கிய ஆதரவாளரானஷர்மிளா பிரியா என்பவர் கேரளா மாநிலம் சோலையூர் காவல்நிலையத்தில் தன் மீது பொய்யான புகார் அளித்துள்ளதாகவும், தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தன்னை பல்வேறு விதங்களில் அழைத்து கொலை மிரட்டல் விடுப்பதால், தனது உயிருக்கும், குடும்பத்தினரின் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி அவர் புகார் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்த்தித்தவிஷ்ணு பிரபு, கேரள மாநிலத்தில்சொகுசு பங்களாவின் உரிமையாளரானஷர்மிளா பிரியா காவல்நிலையத்தில் தன் மீது புகார் அளித்து இருப்பதாகவும், சர்மிளா பிரியா யார் என்று என்பது குறித்து விசாரணை நடத்தினால், பல்வேறு உண்மைகள் தெரிய வரும் என்று தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் வேலுமணியின் டெண்டர் மோசடி குறித்து பல்வேறு ஆவணங்கள்தன்னிடம் இருப்பதாகவும், தேவைப்படும் போது அந்த ஆவணங்கள் வெளியிடப்படும் எனவும் அப்போது விஷ்ணு பிரபு கூறினார்.
இதுதொடர்பான ஆவணங்கள் தனது பத்துக்கும் மேற்பட்ட நண்பர்களிடம் பகிர்ந்து வைத்துள்ளதாகவும் தேவைப்படும் போது, அந்த டெண்டர் ஆவணங்கள் அனைத்தும் காவல் துறையிடமோ அல்லது ஊடகங்கள் முன்னிலையிலோ வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
கேரள மாநிலத்தில் உள்ள சொகுசு பங்களா முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமானது என தெரிவித்திருந்த நிலையில், தற்போது சர்மிளா பிரியா புகார் அளித்து இருப்பதால் அவர் யார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும்என்றுவிஷ்ணுபிரபுதெரிவித்தார்.