கோவை: கோவையில் மீன் பிடித்த 6ம் வகுப்பு மாணவன் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவைபுதூர் அறிவொளி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருடைய மகன் வெற்றி (11), இவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில், நேற்று நண்பர்களுடன் கோவைபுதூர் சுப்பராயன் கோவில் அருகே உள்ள கிணற்றில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கச் சென்றுள்ளான்.
அப்போது, திடீரென்று கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினான். இதனால் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் கோவை தெற்கு தீயணைப்பு நிலைய அதிகாரி வேலுச்சாமி தலைமையில் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர்.
இதையடுத்து, கிணற்றில் குதித்து சிறுவனின் உடலை தேடினர். பின்னர், உடலை கண்டுபிடித்து கயிறு கட்டி மீட்டனர். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.