கோவை: கோவையில் சமூக விரோதிகளால் தாக்கப்படும் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள அன்னை ஆதரவற்றோர் இல்லத்தில், கை கால் ஊனமுற்றவர்கள், மனநிலை சரியில்லாதவர்கள், காது கேளாதவர்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் தங்கி வருகின்றனர். இவர்களுக்கு இல்லத்தின் சார்பில், உணவு, உடை மற்றும் மருத்துவப் பராமரிப்பு உள்ளிட்டவைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அப்பகுதியில், வசிக்கும் சமூக விரோதிகள், சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். கஞ்சா விற்பனை மற்றும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
இதனிடையே, வேலைக்குச் சென்று வரும் மாற்றுத்திறனாளிகளால், சட்டவிரோதமாக விற்பனை இடையூறு ஏற்படுவதை தொடர்ந்து, அவ்வழியே வரும் மாற்றுத்திறனாளிகளை அடிப்பதும், உதைப்பதும் தொடர்கதையாக இருந்த சூழ்நிலையில், நேற்று மாரிமுத்து மற்றும் ரஞ்சித் ஆகிய மாற்றுத்திறனாளிகளை சமூகவிரோதிகள் தாக்கியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சமூக விரோதிகள் குறித்து காவல் நிலையத்திற்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், தங்களுக்கு நீதி வேண்டும் என கோரி கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1) ஞானசேகரன், அன்னை ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி
சமூக விரோதிகள் கெட்டவார்த்தை பேசி அடித்து உதைத்தனர், தீர்வு கேட்டு போலீசாரிடம் சென்றாலும் எங்களுக்கு மரியாதை இல்லை.
2) கலைச்செல்வி, மாற்றுத்திறனாளி
மாற்றுத்திறனாளியாக உள்ள நாங்கள் தன்னம்பிக்கையோடு உழைத்து வாழும் எங்களை, கஞ்சா, மற்றும் குடிகாரர்கள் அடித்து உதைப்பது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.