கோவை கணபதி பகுதியில் வீட்டின் மீது விழுந்துள்ள மரத்தை அகற்றக் கோரி திமுக சார்பில் வருவாய் வட்டாட்சியரிடம் மனு!

கோவை: கோவை கணபதி பகுதியில் பெய்த மழையின் காரணமாக வீட்டின் மீது விழுந்துள்ள மரத்தை உடனே அகற்றித் தரும்படி திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவை கணபதி பகுதியில் பெய்த மழையின் காரணமாக வீட்டின் மீது விழுந்துள்ள மரத்தை உடனே அகற்றி தரும்படி திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கோவை மாநகர் தெற்கு மாவட்டம் கணபதி பகுதி 46வது வட்ட கஸ்தூரிபாய் வீதியில் மல்லிகா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் வீட்டின் மீது அருகாமையில் இருந்த மரம் பலத்த காற்றில் ஒடிந்து விழுந்தது. இதனால் அவர்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதனிடையே, பலமுறை அந்தப் பெண் மாநகராட்சியிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தொடர்ந்து அந்த பெண் கோவை கணபதி பகுதி 46 -வது வட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் கணபதி சம்பத் குமாரிடம் முறையிட்டார்.

இதனைத் தொடர்ந்து, பொறுப்புக் குழு உறுப்பினர் கணபதி சம்பத் குமார் கோவை மாவட்ட வருவாய் வட்டாட்சியரிடம் மல்லிகா வீட்டில் விழுந்த மரத்தை முற்றிலுமாக அகற்றி தருமாறு கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தார்.

இந்த நிகழ்வின் போது, கணபதி பகுதி பொறுப்புக் குழு உறுப்பினர் கணபதி முருகேசன், மாணவரணி தர்மா, இளைஞரணி ஜெகதீஸ், காமராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.

இதையடுத்து, மனுவை பெற்றுக்கொண்ட வருவாய் வட்டாட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...