கோவையில் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கிய கிராம நிர்வாக அதிகாரி சஸ்பெண்ட்..!

கோவை: கோவையில் அன்னூர் பகுதியில் லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக பிடிபட்ட கிராம நிர்வாக அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கோவையில் அன்னூர் பகுதியில் லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக பிடிபட்ட கிராம நிர்வாக அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம், அன்னூர் தாலுகா, வெள்ளானைப்பட்டி ஊராட்சியில் வி.ஏ.ஓ.,வாக பணிபுரிபவர் குமார்(48). இவர் பால்ராஜ் என்பவரிடம் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய, 3,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் பால்ராஜிடம் லஞ்சம் வாங்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும் களவுமாக பிடிபட்டார்.

லஞ்ச ஒழிப்புத் துறை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் திவ்யா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு 11:00 மணி வரை வி.ஏ.ஓ., குமாரிடம் வாக்குமூலம் பெற்றனர்.

இதையடுத்து, அவரை நேற்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, உடுமலை சிறையில் அடைத்தனர். மேலும் கோவை கணபதியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், வி.ஏ.ஓ., குமாரை சஸ்பெண்ட் செய்து கோவை வடக்கு ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...