கோவை: பொள்ளாச்சியில் நான்கு ஆண்டுகள் முடிந்தும் நிறைவேற்றப்படாத பாதாள சாக்கடை திட்டத்தால் கழிவு நீர் வெளியேறாமல் நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை: பொள்ளாச்சி நகரில் நான்கு ஆண்டுகள் முடிந்தும் நிறைவேற்றப்படாத பாதாள சாக்கடை திட்டத்தால் கழிவு நீர் வெளியேறாமல் நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கப்பட்டது. ஆமை வேகத்தில் நடந்து வந்த பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் நேரம் என்பதால் வேகமெடுத்தது.
ஆனால், தேர்தலுக்குப் பின் முடங்கி போன பணிகள் துவங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் இதுவரை 50 சதவிகிதம் பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாததால் விபத்துகள் அரங்கேறி வருகிறது.
மேலும், சில பகுதிகளில் வீடுகளில் இணைக்கப்பட குழாய்கள் இணைப்பு அங்கங்கே பாதியோடு நிற்பதால் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுகள் சாலைகளில் ஓடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோன்று, பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் வீடுகளில் இணைக்கப்பட்ட குழாய்களில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் குறிஞ்சி நகர் செல்லும் ரயில்வே பாலத்திற்கு கீழ் தேங்கி நிற்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கொரோனா நோய் தொற்று அபாயம் உள்ள இந்த சூழலில் சுமார் 500 குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் இப்படி அசுத்தமான சூழல் நிலவுவதால் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் பாதிக்கப்படுவதோடு டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களும் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பல முறை நகராட்சி அதிகாரிகளுக்கு இது பற்றி தகவல் கொடுத்தும் யாரும் நடவடிக்கை எடுக்காத சூழலில், பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகவும் விரைந்து நடவடிக்கை எடுத்து நோய் பரவலில் இருந்து மக்களை காப்பற்ற வேண்டும் என்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடித்து வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி பெருமூச்சை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.