வடசித்தூரில் காவல்துறை சார்பில் கிராமிய விழிப்புணர்வு கூட்டம்.!!

கோவை: கிணத்துக்கடவு அருகே வடசித்தூரில் காவல்துறை சார்பில் கிராமிய விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு அருகே வடசித்தூரில் காவல்துறை சார்பில் கிராமிய விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

அதிகரித்துவரும் திருட்டு, மோசடி, பணம் ஏமாற்றுதல் மற்றும் மகளிர் மட்டும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் காவல் துறையினர் சார்பில் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நெகமம் காவல் துறையினர் சார்பில் கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூரில் கிராமிய விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.



நெகமம் காவல்துறை ஆய்வாளர் சரவணபெருமாள் தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர் சக்தி சரண்யா ஆகியோர் கலந்து கொண்டு கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால் அதைத் தடுக்கும் வகையில் பெற்றோர்கள் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளைக் கண்காணிக்க வளர்க்க வேண்டும், அறிமுகமில்லாத நபர் யாராவது செல்போனில் பேசினால் தவிர்க்க வேண்டும்.

கிராமங்களில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரியும் நபர்கள் குறித்துக் காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும், ஆசை வார்த்தை கூறி கூடுதலாகப் பணம் தரப்படும் என்று தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டால் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், காவல்துறையினர் இந்த கூட்டத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...