கோவையில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு.

கோவை புறநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பது குறித்து காவல் அதிகாரிகள் விழிப்புணர்வு.


கோவை: கோவை புறநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பது குறித்துகாவல் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில், கோவை புறநகர் பகுதியில் உள்ள காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட காவல் அதிகாரிகள், அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் சென்று, குழந்தைகளுக்கு மற்றும் பெண்களுக்கு எதிராக சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, இன்று கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, தடாகம், காருண்யா நகர் மற்றும் பேரூர் ஆகிய காவல் நிலையங்களில் உள்ள பெண்கள் உதவி மைய காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பொதுமக்களிடையே குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சைபர் கிரைம் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

அப்போது, துண்டு பிரசுரங்கள் வழங்கி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறித்து "1098" என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தினர்.மேலும்,வங்கிக் கணக்கிலிருந்து பணம் தொலைந்துவிட்டது போன்ற புகார்களை "155260" என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றனர்.



மேலே, குறிப்பிட்டுள்ள எண்கள் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும் என்று புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...