ஜெயலலிதா உயிரிழந்ததை பயன்படுத்தி தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற முயற்சிக்கிறது என எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் குற்றச்சாட்டு

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை அடுத்து ஏற்படுள்ள வெற்றிடத்தை பயன்படுத்தி தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற முயற்சிப்பதாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் தெளகலான் பாகவி குற்றம்சாட்டியுள்ளார்.

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் தெளகலான் பாகவி, மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இரங்கல் தெரிவித்தார். 

அ.தி.மு.க கட்சியில் அடுத்த பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவது உட்கட்சி விவகாரம் எனவும், அது குறித்து மற்றவர்கள் கருத்து சொல்ல தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார். மேலும், ஜெயலலிதா மறைவிற்கு பின் ஏற்பட்டுள்ள வெற்றிட்டத்தை பயன்படுத்தி பா.ஜ.க தமிழகத்தில் காலூன்ற முயற்சிப்பதாகவும், அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் மற்றும் தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கவனத்துடன் செயல்பட வேண்டுமெனவும் தெளகலான் பாகவி தெரிவித்தார்.

பணம் மதிப்பிழப்பு விவகாரத்தில் மத்திய அரசு சாதாரண ஏழை மக்கள் மீது அறிவிக்கப்படாத போரை தொடுத்து இருப்பதாகவும், 35 நாட்களுக்கு மேலாகியும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவது மத்திய அரசு தோல்வியடைந்து இருப்பதை வெளிப்படுத்துவதாக உள்ளதாகவும்  அவர் தெரிவித்தார். 

வர்தா புயல் நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு இருப்பதாக கூறிய அவர், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசு நிவாரணம் வழங்க வேண்டுமெனவும், அக்கொலையில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெளகலான் பாகவி வலியுறுத்தினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...