கோவை: பொள்ளாச்சியில் மாட்டுச் சந்தை திறக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் மாட்டு வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வருவதை தொடர்ந்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இதில் நேற்று முதல் திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள், பூங்கா, உடற்பயிற்சி மையங்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும், கடைகள் திறக்கப்படும் நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக தொடர்ந்து 2 மாதங்களாக மூடப்பட்டுள்ள பொள்ளாச்சி மாட்டுச் சந்தை, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வில் திறக்கப்படும் என்று வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில், நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் நோய் பரவல் கட்டுப்படுத்தும் விதமாக மாட்டுச்சந்தை செயல்பட தடையை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால், வழக்கம்போல் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சந்தை செயல்படும் என எதிர்பார்த்து காத்திருந்த மாட்டு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மாடுகள் விற்பனைக்கு வராததால் மாட்டுச் சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.
எனவே, அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து நோய் பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குவோம் என்று தெரிவித்த மாட்டு வியாபாரிகள், விரைவில் சந்தை செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.