கோவையில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கோவை: கோவையில் நடந்த இருவேறு சம்பவங்களில் ஆட்டோவில் பயணம் செய்த மூதாட்டி தவறி விழுந்தும், ரயில் மோதி முதியவரும் பரிதாபமாக பலியானார்.


கோவை: கோவையில் நடந்த இருவேறு சம்பவங்களில் ஆட்டோவில் பயணம் செய்த மூதாட்டி தவறி விழுந்தும், ரயில் மோதி முதியவரும் பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை காந்தி பார்க் மாகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் இவருடைய மனைவி பொன்னுத்தாய் (65), இவர் ஆட்டோவில் உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த ஆட்டோ வைசியாள் வீதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்ற போது, திடீரென்று மாடு குறுக்கே வந்ததால் டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.

அதில் ஆட்டோவில் இருந்த பொன்னுத்தாய் தவறிக் கீழே விழுந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்த பொன்னுத்தாய் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக மூதாட்டி உயிரிழந்தார். இதுகுறித்து கோவை ஆர்.எஸ். புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதேபோல, கோவை சோமனூர் சூலூர் இடையே ரயில் தண்டவாளத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சடலமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த போத்தனூர் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர், அவர்கள் அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இறந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...