கோவையில் அரசின் தொகுப்பு வீட்டு மேற்கூரை மழையால் சேதமடைந்து சரிந்து விழுந்ததில் கூலி தொழிலாளி பலி..!

கோவை: கோவை அருகே அரசின் தொகுப்பு வீட்டு மேற்கூரை மழையால் சேதமடைந்து சரிந்து விழுந்ததில் கூலி தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை அருகே அரசின் தொகுப்பு வீட்டு மேற்கூரை மழையால் சேதமடைந்து சரிந்து விழுந்ததில் கூலி தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது-

அன்னூர் அருகே உள்ள பிள்ளையார் பாளையம் ஊராட்சி ஆதிதிராவிடர் காலணியைச் சேர்ந்தவர் சின்னான் (52), இவருடைய மனைவி ராதாமணி (47), இவர்களுக்கு ஒரு மகன் மகள் உள்ளார். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. சின்னான் தனது மனைவியுடன் அங்குள்ள தொகுப்பு வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், அன்னூர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்தது. ஏற்கனவே சின்னான்வீடு பழுதடைந்த நிலையில் தான் இருந்தது. இந்த நிலையில், தற்போது பெய்த மழை காரணமாக வீட்டின் மேற்கூரை பழுதடைந்துள்ளது.

எனவே, அதை சரி செய்யும் பணியில் தனது உறவினரான மகேந்திரன் (45) என்பவருடன் சின்னான் வேலையில் ஈடுபட்டார்.

அப்போது, வீட்டின் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளுக்குள் சின்னான் சம்பவ இடத்திலேயே சிக்கி பலியானார். மகேந்திரன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், இதுகுறித்து தகவலறிந்த அன்னூர் போலீசார், கிராம நிர்வாக அதிகாரி காளிமுத்து மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், சின்னான் உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...