கோவையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது!

கோவை: கோவையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


கோவை: கோவையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கோவை பீளமேடு விளாங்குறிச்சி சேர்ந்த மூர்த்தி (33), இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். திருமணமாகி மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், இவர் தனது உறவினரான கோவையைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியின் வீட்டுக்குச் சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு மூர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இந்த சம்பவம் குறித்து பெற்றோர் கோவை கிழக்குப்பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் மூர்த்தி மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...