பொள்ளாச்சி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது - 540 லாட்டரி சீட்டுகள் பறிமுதல்!

கோவை: பொள்ளாச்சி அருகே தெப்பக்குளம் வீதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார், 540 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே தெப்பக்குளம் வீதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார், 540 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட கேரளா லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பல்வேறு சோதனைகளை போலீசார் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி தெப்பக்குளம் வீதி அருகே சிலர் கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக கிழக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று உதவி ஆய்வாளர் காலேப் தலைமையிலான போலீசார் அங்கு சென்று நடத்திய சோதனையில், மோதிராபுரம் பகுதியை சேர்ந்த அரவிந்தன்(28) என்பவர், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.



இதனை தொடர்ந்து, அவரிடம் இருந்த 540 கேரளா லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...