கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் ஆட்டோ திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன், ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் கடந்த 21ம் தேதி இரவு வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். காலை எழுந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை.
இதுகுறித்து, அவர் ஆனைமலை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் காணாமல் போன ஆட்டோவை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று ஆழியாறு ரோடு அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, காணாமல் போன ஆட்டோ பிடிபட்டது.
மேலும், ஆட்டோவை திருடிச் சென்ற ஆனைமலைப் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் (25) என்பவரை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.