பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் சுகாதார சீர்கேட்டை நிவர்த்தி செய்யக்கோரி அலுவலக வளாகத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

கோவை: பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் சுகாதார சீர்கேட்டை நிவர்த்தி செய்யக்கோரி அலுவலக வளாகத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் சுகாதார சீர்கேட்டை நிவர்த்தி செய்யக்கோரி அலுவலக வளாகத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தலைமை தொலைபேசி நிலையத்தில், கடந்த மாதம் முதல் கழிவறைகள் சுத்தம் செய்யப்படவில்லை என்று ஊழியர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.



இந்நிலையில், இதுவரை அதிகாரிகள் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலக வளாகத்தில், இன்று பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்க நிர்வாகி சப்தகிரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அலுவலகத்தில் சுகாதார சீர்கேட்டால் துர்நாற்றம் வீசுவதாக கூறியும், இதை கண்டுகொள்ளாத அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், உடனடியாக அதிகாரிகள் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் நிலவும் சுகாதார சீர்கேட்டை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பிரபாகரன், மனோகரன், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...